அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்

Erode news- விபத்துக்குள்ளான ஜீப்பை படத்தில் காணலாம்.
Erode News, Erode Today News, Erode Live News - அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பழைய மேட்டூர் தர்மபுரி பகுதியை சேர்ந்த 4 பேர் கோபியில் ஜீப்க்கு உதிரி பாகம் வாங்குவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், ஜீப் பழைய மேட்டூர் அருகே வந்த போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, ஜீப் அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை பக்கவாட்டில் இழுத்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் ஓரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu