/* */

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
X

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், ராசாக்கவுண்டனூரில் நடைபெற்ற, வருமுன் காப்போம் மருத்துவ முகாமை, விட்டமநாய்க்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரீத்தா பழனிசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நாமக்கல் ஊõரட்சி ஒன்றியம் ராசாக்கவுண்டனூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. ராசாக்கவுண்டனூர் அரசு தொடக்கபள்ளியில் நடைபெற்ற முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

விட்டமநாய்க்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ரீத்தா பழனிசாமி முகாமை தொடங்கி வைத்தார். அட்மா தலைவர் பழனிவேலு, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிசாமி, பிடிஓ அருளாளன், யூனியன் இன்ஜினியர் கலைச்செல்வி, பஞ்சாயத்து துணைத்தலைவர் சசிகலா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

டாக்டர்கள் சுரேஷ், பிரித்தி, தீபா, வனிதா, பூபதிராஜா மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமில் கலந்து கொண்டு, 450க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். முடிவில் சுகாதார ஆய்வாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.

Updated On: 18 March 2022 12:15 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோட்டில் வணிகர் சங்க புதிய கிளை திறப்பு
  2. உலகம்
    ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உக்ரைனின் ஜெலென்ஸ்கி சந்திப்பு
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
  4. பரமக்குடி
    ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
  5. கல்வி
    பறக்கும் இறக்கையில்லா பிராணிகள்..! படைப்பின் விசித்திரம்..!
  6. ஈரோடு
    நோயாளிகள் மருத்துவர்களின் வாடிக்கையாளர்கள் அல்ல: ஐஎம்ஏ தேசிய தலைவர்...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
  8. ஈரோடு
    மோடி அரசு இன்னும் 5 மாதத்தில் கலைந்து விடும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்...
  9. ஆரணி
    ஆரணி அருகே ஸ்ரீமணி கண்டீஸ்வரா் கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்