குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்

குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச   கண் சிகிச்சை முகாம்
X

அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது

அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவகுழுவினர் பங்கேற்று சிகிச்சை வழங்கினர். இதில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், விழித்திரை மூடியமைக்கு அதனை அகற்றி சிகிச்சை, கண் வலி, கண் எரிச்சல், உள்ளிட்ட பல சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

அம்மன் நகர், நாராயண நகர், மேற்கு காலனி, கிழக்கு காலனி, சுள்ளிமடைதோட்டம், உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற்றனர், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சைக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் தலைவர் சன்முகசுந்தரம், தலைவர் மாதேஸ்வரன், செயலர் கதிர்வேல், பொருளர் செல்லவேல், உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையம் டெக்ஸ்சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், பாசம் ஆதரவற்றோர் மையத்திற்கு லேப்டாப் வழங்கும் விழா, சங்க தலைவர் தனபால் தலைமையில் நடந்தது. மையத்தில் உள்ள நபர்களின் பெயர், விலாசம் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்தல், மையத்தின் அரசு அனுமதி கடித நகல், மருத்துவ சிகிச்சை குறித்த விபரங்கள் பதிவு செய்தல், மையத்தின் முதியோர்களுக்கு உணவு வழங்க வரும் நபர்களின் விபரங்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, கணினி ஒன்று கேட்டு, விண்ணப்பித்திருந்தனர்.

இதனை பரிசீலித்து, லேட்டாப் கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி நேற்று லேப்டாப் வழங்கும் விழாவில், மையத்தின் நிறுவனர் குமார் வசம், லயன்ஸ் நிர்வாகிகள் வழங்கினர். லேப்டாப் பெற்றுக்கொண்ட குமார், லயன்ஸ் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Tags

Next Story
ராசிபுரம் பகுதியில் எம்ஜிஆா் பிறந்த நாள் கொண்டாட்டம்..!