ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!

ராமநாதபுரத்தில் மஞ்சு விரட்டு: திரண்டு ரசித்த கிராம மக்கள்..!
X

மஞ்சுவிரட்டு.


ராமநாதபுரத்தில் நடந்த மஞ்சு விரட்டு நிகழ்ச்சி. திரண்டு ரசித்த கிராம பொதுமக்கள்.

இராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கருமொழி கிராமத்தில் அருள்மிகு திருவேட்டை அய்யனார், அருள்மிகு தர்ம முனிஸ்வரர் ஆலய வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முதலில், கோவில் காளைகள் பேராவூரணியில் இருந்து வரவழைக்கப்பட்டு முதல் மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பிறகு, காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து விடப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காளைகளுக்கு துண்டு , வேஷ்டியும் உரிமையாளர்களுக்கு தாம்பூல தட்டு, பிளாஸ்டிக் சேர் ஆகியவை கருமொழி கிராம மக்கள் சார்பில் வழங்கப்பட்டது.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப் பாய்ந்து ஓடியது. அதை அடக்க காளையர்கள் விரட்டினர்.சில காளைகளை அடக்கினர். இந்நிகழ்வினை, நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்