/* */

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்

கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தினார்.

HIGHLIGHTS

கோடையில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம்: அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்
X

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார். அருகில் கலெக்டர் ஸ்யோசிங், ராஜ்யசபா எம்.பி ராஜேஸ்குமார் ஆகியோர்.

கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் லமதிவேந்தன் தலைமை வகித்துப் பேசுகையில், நாமக்கல் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் ரூ. 185.24 கோடி மதிப்பில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதன் காரணமாக நாமக்கல் நகராட்சியில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ராசிபுரம் நகராட்சி உள்பட ஆர்.புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, வெண்ணந்தூர், பிள்ளாநல்லூர், மல்லசமுத்திரம், அத்தனூர் ஆகிய 8 டவுன் பஞ்சாயத்துக்கள் மற்றும் 523 ஊரக குடியிருப்புகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.854.37 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் முழுமையடையும்போது நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

தற்போது கோடை காலம் தொடங்கி வருவதால் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். குடிநீர் விநியோகம் செய்யும் குழாய்களில் பழுதுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ் நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் ஆகியவற்றை உள்ளாட்சி நிர்வாகங்களின் அலுவலர்கள் ஆய்வு செய்து சுத்தமாக உள்ளதையும், தேவைகேற்றளவு குடிநீர் வருவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Updated On: 9 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...