திண்டுக்கல் நத்தம் கோயில்களில் தேய்பிறை அஷ்டமி திருவிழா

திண்டுக்கல் நத்தம் கோயில்களில்   தேய்பிறை அஷ்டமி திருவிழா
X

நத்தம் பகுதி  கோயிலில், தேய்பிறை அஷ்டமி திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

Temple Astami Special Pooja தேய்பிைறை அஷ்டமியையொட்டி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

Temple Astami Special Pooja

திண்டுக்கல் மாவட்டம்,நத்தத்தில் தை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ,நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு கால பைரவருக்கு அபிஷேகம் இளநீர் சந்தனம் ஜவ்வாது மஞ்சள் தேன் போன்ற 16 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி,ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட வெள்ளிக் கவசத்தில் சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக,மூலவர் கைலாசநாதர் செண்பகவல்லி தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.நத்தம் மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணப்பட்டது ரூ. 2 லட்சம் காணிக்கை வந்துள்ளது .

திண்டுக்கல் மாவட்டம், தென் தமிழகத்தில் புகழ்பெற்ற நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

இதில் ரொக்கம் ரூ.2 லட்சத்து, 18 ஆயிரத்து, 918ம் , காணிக்கையாக கோயிலுக்கு வந்துள்ளது

.உண்டியல் திறப்பின் போது, கோவில் செயல் அலுவலர் சூரியன், ஆய்வாளர் செல்வம், கோவில் பூசாரிகள், வங்கி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் குழுவினர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!