பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என தெரியுமா?

பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள  தடை எந்த நாட்டில் என தெரியுமா?
X
வட கொரியாவில் பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை விதித்து அந்த நாட்டின் அதிபர் உத்தரவிட்டு உள்ளார்.

வட கொரியாவில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வடகொரியா முழுவதும் புதிய விதிமுறை ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார். பெண்கள் இனி லிப்ஸ்டிக் போட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வடகொரியா. இந்த நாட்டின் தலைவராக கிம் ஜாங் உன் உள்ளார். அதிபர் ஆட்சி நடைபெறும் வடகொரியா ஒரு கம்யூனிச நாடு என்று சொல்லப்பட்டாலும் அங்கு தற்போது சர்வாதிகார ஆட்சியே நடைபெற்று வருகிறது.

அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன்னுக்கு எதிராக மூச்சு விட முடியாது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயும் சோதனை போன்றவற்றை நடத்தி வருகிறார். கிம் ஜாங் உன்: சர்வதேச நாடுகளுடன் மொதல் ஒருபக்கம் என்றால் உள்நாட்டில் பல விசித்திரமான கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியாவை பெரிய இரும்புத்திரை கொண்டு மூடி வைத்து இருக்கிறார் கிம் ஜாங் உன்.

அதாவது வெளியுலக தொடர்பு எதுவும் இன்றி திறந்த வெளி சிறையை போல வடகொரிய மக்கள் வாழ்ந்து வரும் அளவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. மேற்கத்திய நாட்டு படங்களை பார்க்க தடை, சிகை அலங்காரத்திற்கு தடை என வடகொரியாவில் பல விசித்திர கட்டுப்பாடுகள் உண்டு. அதேபோல இந்த கட்டுப்பாடுகளை மீறினால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவுக்கு பல கொடூர தண்டனைகளும் விதிக்கப்படும். மக்கள் எப்படி உடை அணிந்து கொள்ள வேண்டும், எப்படி முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்பது வரைக்கும் அங்கு கட்டுப்பாடுகள் உள்ளன.

பல வினோத கட்டுப்பாடுகளின் வரிசையில் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை வடகொரியாவில் விதித்து இருக்கிறார் கிம் ஜாங் உன். தற்போது வடகொரிய மக்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிங் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச வண்ணத்தை பிரதிபலிப்பது என்றாலும் கூட முதலாளித்துவத்தின் அடையாளாமாக சிவப்பு நிறம் இருப்பதாக கிம் ஜாங் உன் கருதுகிறாராம். அது மட்டும் இன்றி ரெட் லிப்ஸ்டிக் பூசுவது மிகவும் கவர்ச்சிரமாக இருக்கும் என்றும் எளிமையாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும் என்ற விதிகளை மீறும் விதமாக ரெட் லிப்ஸ்டிக் இருப்பதால் அரசு இத்தகைய தடையை விதித்துள்ளதாம்.

எனவே, பெண்கள் மிகவும் குறைந்த அளவிலான மேக் அப் மட்டுமே இனி போட முடியும். மீறினால் என்ன நடவடிக்கை: லிப்ஸ்டிக்கிற்கு இப்போது தடை விதிக்கப்படாலும் கூட ப்ளூ மற்றும் தோல் நிறத்திலான ஜீன்ஸ், குறிப்பிட்ட ஹேர்ஸ்டைல்ஸ்களை வைக்க தடை என பல கட்டுப்பாடுகளை அந்த நாடு தனது மக்களுக்கு விதித்துள்ளது.

சரி இந்த தடையெல்லாம் இருக்கட்டும்.. மீறினால் என்ன நடக்குமாம் தெரியுமா? அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வடகொரியா விதித்துள்ள ஆடை கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும். சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது பொது இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் அத்தகைய ஆடையை அணிய முடியாதவறு கிழித்துவிடுவார்களாம்.

Tags

Next Story