/* */

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி

பருவகாலத்திற்கேற்ப மீன்வளர்ப்பு குறித்து இலவச பயிற்சிமுகாம், நாமக்கல்லில் வருகிற 12ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 12ம் தேதி மீன் வளர்ப்பு குறித்து பயிற்சி
X

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 12ம் தேதி வியாழக் கிழமை காலை 10 மணிக்கு, பருவகாலத்திற்கேற்ற மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், மீன்வளர்ப்பு பண்ணைக் குட்டைக்கு தேவையான இடம் மற்றும் நீர் தேர்வு செய்தல், பருவகால மாற்றத்திற்கேற்ப வெப்பநிலை தாங்கக்கூடிய மீன் குஞ்சுகள் தேர்வு செய்தல், நீர் மேலாண்மை, தீவன மேலாண்மை, மீன்கழிவுகளை மறுசுழற்ச்சி செய்து மீன்களுக்கு உணவாக பயன்படுத்துதல் மற்றும் மத்திய அரசின் மூலம் மீன் வளர்ப்புக்கான மானியம் பெறுதல் போன்றவை குறித்து விரிவாக கற்றுத்தரப்படும்.

பயிற்சியில், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’