/* */

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்

சேலம் -கரூர் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலம்- கரூர் இரட்டை ரயில் பாதை பணிகளுக்கு ரயில்வே துறை ஒப்புதல்
X

பைல் படம்.

தமிழகத்தில் சேலம் - நாமக்கல் - கரூர் உள்ளிட்ட 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில் முக்கிய ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ரயில்வே சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது. அதன் முடிவுகளுக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்த ரயில்வே வாரியம் ஒப்பதல் அளித்து வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் ரயில் போக்குவரத்து தேவை அதிகரித்துள்ள திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைப்பதற்கான பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்குக்குப்பின் பெரும்பாலான ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் புதிய ரயில் பாதைகள், இரட்டை பாதைகள் அமைப்பதற்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 4 வழித்தடங்களில் இரட்டை ரயில் பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - ஈரோடு, சேலம் - நாமக்கல் - கரூர், கரூர் - திண்டுக்கல், விழுப்புரம் - காட்பாடி ஆகிய 4 வழித்தடங்களில் இரட்டை ரயில்பாதை அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி 6 மாதங்களில் முடிவடையும். அதன்பிறகு, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  4. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  5. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  6. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  7. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  8. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  9. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்