/* */

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: பிருந்தா கரத் பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என, நாமக்கல்லில் சிபிஐ (எம்) தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்.

HIGHLIGHTS

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது: பிருந்தா கரத் பேட்டி
X

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஐ (எம்) தலைமை செயற்குழு உறுப்பினரும் பிரந்தா கரத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது என, நாமக்கல்லில் சிபிஐ (எம்) தலைமை செயற்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்.

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின், 4-வது அகில இந்திய மாநாடு, நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில், 19ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் சார்பில் விவாதம், தொகுப்புரை, அகில இந்திய கமிட்டி நிர்வாகிகள் தேர்வு ஆகியவை நடைபெறுகின்றன. முன்னதாக, நாமக்கல் நகரில் ஆதிவாசிகள் அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து இந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் பாபுராவ், கொடியேற்றி வைத்தார். கேரள மாநில தொழில்துறை அமைச்சர் ராஜீவ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசினார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியை, சிபிஐ (எம்) அரசியல் தலைமை செயற்கு குழு உறுப்பினரும், முன்னாள் எம்பியுமான பிருந்தா காரத் தொடங்கி வைத்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளாக பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது பாஜகவின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம். 2029 -ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே மகளிர் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது, ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் அரசியல் தந்திரம். இது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வருகின்ற 5 மாநில சட்சபைத் தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெரு. அதற்குப் பின்னர் 2024-ம் ஆண்டு பார்லி. தேர்தலில் சிபிஐ-யின் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் முடிவு செய்யப்படும், தமிழக அரசு வழங்கி வரும் பெண்களுக்கான உரிமைத்தொகை, பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.

இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு என்று கூறினார். இன்று 3வது நாள் மாநாடு நடைபெறும். இறுதியில் தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.

Updated On: 20 Sep 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...