/* */

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை என்பதால் பொதுமக்கள் பீதியடையவேண்டாம் என கலெக்டர் கூறியுள்ளார்

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை: கலெக்டர்
X

நன்செய் இடையார் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், நன்செய் இடையார் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்திற்கு உட்பட்ட நன்செய் இடையாறு கிராமத்தில், மூன்றரை வயது சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிறகு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுமி உயிரிழந்தார்

சிறுமிக்கு டெங்கு காய்ச்சலுக்கான ஆய்வக பரிசோதனை செய்யப்பட்டதில், டெங்கு காய்ச்சல் இல்லை எனவும் வைரஸ் காய்ச்சலினால் தாக்கம் ஏற்பட்டு இறப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, நன்செய் இடையாறு பகுதியில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை மூலம் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலை மாலை இரு நேரங்களிலும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல் நோயாளிகள் உள்ளனரா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நடைபெற்ற முகாமில் இரண்டு நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் பற்றி பீதி அடைய தேவை இல்லை.

தற்போது பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இடங்களில் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், தொட்டிகள், மண்பானைகள், சிமெண்ட் தொட்டிகளில் கொசு புகாத வண்ணம் நன்கு மூடி வைத்து பராமரிக்க வேண்டும்.

கொசு புழுக்கள் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீரை கவிழ்த்து கொசு புழுக்களை அழித்து விட வேண்டும். மேலும் தங்கள் வீடுகளில் அல்லது அந்த பகுதிகளில் காய்ச்சல் அறிகுறி எவருக்கேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் அறிகுறி கண்டவுடன் உடனடியாக சென்று சிகிச்சை பெற வேண்டும். .

மேலும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க 15 வட்டாரங்களிலும் 318 கொசு ஒழிப்பு பணியாளர்களும், பேரூராட்சி பகுதிகளில் 190 கொசு ஒழிப்பு பணியாளர்களும், நகராட்சிகளில் 295 கொசு ஒழிப்பு பணியாளர்களும் நியமிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு நடவடிக்கை மருந்து தெளிக்கப்பட்டு, புகை மருந்து அடிக்கும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் கலையரசு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Jan 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?