/* */

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் என்சிசி தின விழா

Namakkal news -நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் என்சிசி தின விழா
X

Namakkal news- நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற என்சிசி தின விழாவில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Namakkal news, Namakkal news today- நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவர் படை தின விழா சிறப்பாக நடைபெற்றது.

தேசிய மாணவர் படை தின விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேலம் 12வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த ஹவில்தார் கோவிந்தராஜ் கலந்து கொண்டு முப்படை பிரிவுகளில் என்சிசி மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுவது எப்படி என்ற தலைப்பில் பேசினார்.

மேலும், என்சிசி தேர்வுகளில் சிறப்பு தகுதியுடன் தேர்ச்சி பெற்ற 19 மாணவ மாணவிகளுக்கு பி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட் சவுந்திரராஜன் மற்றும் சேலம் 12வது தமிழ்நாடு பட்டாலியன் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Updated On: 27 March 2024 2:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  3. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில், அன்பின் வெளிப்பாடுகள்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,316 கன அடியாக அதிகரிப்பு
  8. திருநெல்வேலி
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஈரோடு
    பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்:...
  10. காஞ்சிபுரம்
    +1 தேர்வு முடிவுகள் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98% மாணவர்கள்...