/* */

கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி

கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
X

நீதிமன்றத்தால் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேர்.

தென்காசி மாவட்டம், விகே புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடையர்தவனை ராமர் என்பவரின் மகன் ஐயப்பன்(37), தாயார் தோப்பு குத்தாலிங்கம் என்பவரின் மகன் சேர்மலிங்கம்(50), ஜான்சன் என்பவர் மகன் மோசஸ் ராஜ்குமார்(44), சங்கரன்கோவில் முருகேசன் என்பவரின் மகன் மணிகண்டன்(57), ராஜபாளையம் சீனி என்பவரின் மகன் வீரபாண்டியன்(57) மற்றும் ராஜபாண்டி சண்முகையா என்பவரின் மகன் ராஜேந்திரன்(52) ஆகியோர் அப்போதைய சுரண்டை காவல் ஆய்வாளர் பெருமாள் கைது செய்து சிறையில் அடைத்தார்.

இவ்வழக்கின் விசாரணையானது தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கினை விசாரணை செய்த நீதிபதி மாரீஸ்வரி குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இவ்வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த விகே புதூர் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Updated On: 23 April 2024 1:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!