/* */

ஜவுளி, நகை கடைகளை திறக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்டைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

HIGHLIGHTS

ஜவுளி, நகை கடைகளை திறக்க வணிகர் சங்கத்தினர் கோரிக்கை
X

நாமக்கல்லில் நடைபெற்ற வணிகர் சங்கத்தினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் சப் கலெக்டர் கோட்டைக்குமார் பேசினார். அருகில் நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்டைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று சப் கலெக்டரிடம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் அரசு அறிவித்துள்ள பட்டியல் 1ல் உள்ள 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் இடம்பெற்றுள்ளதால், குறிப்பிட்ட சில தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, மளிகை, பேக்கரி, ஓட்டல்கள், டீக்கடைகள், கட்டுமானப்பொருட்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் போன்ற கடைகள் மட்டுமே திறக்க வேண்டும் என்று அரசு அனுமதி அளித்துள்ளது. ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அண்டை மாவட்டங்களில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள வாடிக்கையாளர்கள் அங்கு சென்று வாங்குவார்கள் எனவே வியாபாரம் பாதிக்காமல் இருக்க நாமக்கல் மாவட்டத்திலும் ஜவுளி மற்றும் நகைக்கடைகள குறிப்பிட்ட நேரம் வரையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வணிகர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மனு அளித்தனர்.

கலெக்டர் அறிவுறுத்தலின்படி, அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. சப்கலெக்டர் கோட்டைக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், தாசில்தார் தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயகுமார் தலைமையில் அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில்கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளை திறக்க, மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்றும், வணிகர்களுக்கு சிறப்பு கொரேனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என்றும் வணிகர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கூட்டத்தில், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை, வணிகர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும். கொரோன பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி வணிகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் அரசு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 30 Jun 2021 3:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  8. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  9. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!