எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள், ஒப்புவித்தல் போட்டிகள்

எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள், ஒப்புவித்தல் போட்டிகள்
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு விருந்தினர் தாமல் சரவணன்

எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பில் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை எஸ்கேபி கல்வி குழுமம் சார்பாக மாபெரும் ஓவியம், நடனம், பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், செங்கம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது.

திருக்கோவிலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் ஓவியம் நடனம் பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தாமல் சரவணன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் தாமல் சரவணன். நவீன உலகில் பெற்றோரின் கலை என்ற தலைப்பில் உத்வேகமான உரையை வழங்கினார்.

குழந்தைப் பருவத்தில் இருந்து முதிர்வயது வரை ஒரு குழந்தையின் உடல், உணர்ச்சி, சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் அவர் வலியுறுத்தினார்.

பல்வேறு நிகழ்வுகளில் பெற்றோருடன் மட்டும் சுமார் 700 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செங்கம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்கேபி கல்வி குழுமத்தின் சார்பாக மாபெரும் ஓவியம் நடனம் பாடல் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்க்கையை வாழ வேண்டும். ஒரு முடிவை தெளிவாக மாணவர்கள் எடுக்க வேண்டும். மாறுபட்ட பார்வையில் நாம் வாழ்க்கையை வாழ வேண்டும், நாம் செய்கின்ற செயலுக்கு பின்னால் அறிவும் ஆன்மீகமும் உள்ளது. எந்த ஒரு குழந்தை பெற்றோரின் சுமையை சுமக்கின்றதோ அது பெற்றோரின் பாரத்தை கடைசி வரை சுமக்கும்,

கல்வி என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருக்கு இடையேயான கூட்டாண்மையாகும். இது ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாதையை விளக்கும் என பெற்றோர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் அறிவுரைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சுமார் 750 மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் எஸ்கேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெற்றிவேல், எஸ் கே பி பன்னாட்டு பள்ளி முதல்வர் பிரியா கருணாநிதி ,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாலதி, முதன்மை நிர்வாக அதிகாரி சக்தி கிருஷ்ணன், எஸ்கேபி பொறியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன், முனைவர் கார்த்திகேயன், மற்றும் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai automation in agriculture