/* */

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை முதல் திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:  நாளை முதல் திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம்
X

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி.

இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள, நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து தேர்தலுக்கான விருப்ப மனு நாளை 19ம் தேதி வெள்ளிகிழமை காலை 10 மணி முதல் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கப்படும். திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்குரிய விண்ணப்ப படிவத்தினை ரூ-10/- செலுத்தி, மாவட்ட அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 24ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு செய்பவர்கள் ரூ.10 ஆயிரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு விருப்ப மனு செய்பவர்கள் ரூ.2,500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதியில் போட்டியிடுவோர் இந்த கட்டணத்தில் பாதித் தொகை மட்டுமே செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Nov 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு