மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
X

மேட்டூர் அணை.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 126 கன அடியிலிருந்து 207 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 126 கன அடியிலிருந்து 207 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,200 கன அடியாக குறைந்தது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று (மே.15) புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 126 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.16) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 207 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 50.36 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 50.16 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 17.91 டிஎம்சியாக உள்ளது. மேலும், அணைப் பகுதியில் 18.2 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
குடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமா வெச்சுக்கணுமா? அப்ப இத கண்டிப்பா பண்ணுங்க!| how to improve gut health in Tamil