/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 29 பேர் கொரோனாவால் பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 53,449 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 29 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர். மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,384 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்ததால் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பரமத்திவேலூர், கொமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர், என்.கொசவம்பட்டி, கீரம்பூர், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு, ஈரோடு, பள்ளிபாளையம், கொமாரபாளயைம், ராசிபுரம், பெருந்துறை, கோவை, கரூர், உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று 42 பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 53,449 பேர் சிகிச்சை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 418 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 517 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 22 Dec 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  2. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  4. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  6. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  7. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  8. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  10. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்