/* */

நாமக்கல் மாவட்டம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் சரிவு

பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்ட மாணவர்கள் 94.70 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 16ம் இடம் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம்: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் சரிவு
X

நாமக்கல் மாவட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மே 5ல், துவங்கி 28 ல் முடிவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் பள்ளிகளை சேர்ந்த, 9,392 மாணவர்கள், 9,705 மாணவியர் என மொத்தம் 19,097 97 பேர் தேர்வு எழுதினர். இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாவட்ட அளவிலான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில், 8,725 மாணவர்கள், 9,359 மாணவியர் என மொத்தம் 18,084 தேர்ச்சியடைந்தனர். 1,013 பேர் தோல்வி அடைந்தனர். மாணவர்கள் 92.90 சதவீதம், மாணவியர் 96.43 சதவீதம் என மொத்தம், 94.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

* அரசு பள்ளிகள்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 89 அரசு பள்ளிகளில் 4,437 மாணவர்கள், 4,802 மாணவியர் என, மொத்தம் 9,239 பேர் தேர்வு எழுதினர். அதில் மாணவர்கள் 3,858 பேரும், மாணவியர் 4,522 பேரும் என, மொத்தம் 8,380 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் மொத்தம் 90.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்..

* பழங்குடியினர், ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி

மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளை சேர்ந்த 321 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 272 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 84.73 சதவீதம். கொல்லிமலை ஏகலைவா மாதிரி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதேபோல் களங்காணி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தேர்வு எழுதிய, 85 மாணவ மாணவிகளல், 82 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 96.47 சதவீதம்.

மாவட்டத்தில் மொத்தம் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்சி பெற்றள்ளன. அவற்றில் 8 அரசு பள்ளிகள் அடங்கும். மாணவர்களை விட, மாணவியர் 3.53 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் பல சாதணைகளைப் படைக்கும். வழக்கமாக 5 இடங்களுக்குள் இருக்கும். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சரிவடைந்து நாமக்கல் மாவட்டம் மாநில அளவில் 16ம் இடம் பிடித்துள்ளது.

Updated On: 20 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  2. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  3. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  9. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?