/* */

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் குழந்தைகளைப் பாதுகாக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு
X

இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு உதவிட, மாவட்ட கலெக்டரை தலைவராகக் கொண்டு, மாவட்ட அளவில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவத்துறை இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டரால் பரிந்துரைக்கப்பட்ட குழந்தைகள் இல்லம் நடத்துபவர் என 6 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள், மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

எனவே, பொதுமக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோரை இழந்து தனிமையில் வாழும் குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள், சிகிச்சையில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் ஆகியோரை பற்றி தகவல் தெரிந்தால் அக்குழந்தைகளுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள், உளவியல் ஆலோசனைகள் உள்ளிட்ட பாதுகாப்பும், பராமரிப்பும் வழங்குவதற்காக இக்குழுவினருக்கு தகவல் அளிக்கலாம்.

மேலும், ஊரடங்கைப் பயன்படுத்தி குழுந்தை திருமணம் செய்து வைத்தாலோ, குழந்தைகளை தொழிலாளர்களாக அமர்த்தினாலோ அல்லது குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து தகவல்களை தெரிவிக்க சைல்டுலைன் (1098), 181 மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 04286 233103, 79047 16516 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 July 2021 3:11 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு