/* */

நாமக்கல்லில் 214 கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்- 5 பேர் கைது

கர்நாடகா மதுபாட்டில்களைக் கடத்தி வந்த லாரி டிரைவர் உட்பட 5 பேரை, நாமக்கல்லில் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 214 கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்- 5 பேர் கைது
X

நாமக்கல் எஸ்.ஐ. சங்கீதா தலைமையில் போலீசார், நாமக்கல்–சேலம் ரோட்டில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரண்டு வாலிபர்கள் ஒரு மோட்டார் பைக்கில் சாக்கு மூட்டையுடன் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், அவர்கள் ராசிபுரம், பிலிப்பாக்குட்டையை சேர்ந்த சங்கர் (29), ராமாபுரம்புதூரைச் சேர்ந்த சக்திவேல் (28) என்று தெரியவந்தது.

அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையில், கர்நாடகா மதுபாட்டில்கள் வைத்து அவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, 70 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கேபாலகிருஷ்ணன் (30), லாரி டிரைவர். இவர், மகாராஷ்டிராவில் இருந்து வெங்காய லோடு ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். பெங்களூர் வந்தபோது, மதுபாட்டில்களை வாங்கி வெங்காய லோடில் மறைத்து எடுத்து வந்தார்.

நாமக்கல் அருகே வந்ததும், தனது நண்பர்களான மரப்பம்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் (25), கிருஷ்ணமூர்த்தி (33) ஆகியோரை வரவழைத்து, மதுபாட்டில்களை கொடுத்துள்ளார். இது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததும், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து லாரி டிரைவர் உள்ளிட்ட 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்த 144 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Updated On: 10 Jun 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!