/* */

நாமக்கல்லில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் 12 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா: அமைச்சர் மதிவேந்தன் பங்கேற்பு
X

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், அமைச்சர் மதிவேந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா இன்று நடைபெற்றது. ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனற். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 12 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர்பேசியதாவது:

உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வதுடன் அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும், என்ற நோக்கத்தால் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளாக ஐ.நா.சபை அறிவித்தது.

அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கமும் சேவை வழங்கும் தொண்டு நிறுவனங்களும், பெற்றோரும், ஏனைய மனிதர்களும் உதவுவதும், அவர்களின் வாழ்க்கையில் எல்லோரையும் போல சகல உரிமைகளையும் பெற வைப்பதும் ஒரு சமுதாய கடமையாகும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே அந்த தினத்தின் நோக்கமாகும்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் கருணாநிதியால், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறையை உருவாக்கி நல வாரியத்தை ஏற்படுத்தினார்.

தற்போது, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறது. கொரோனா காலத்தில் அவர்களுக்கு தனி தடுப்பூசி முகாம், மருத்துவ மையங்கள் அமைத்து மருத்துவ உதவிகளை வழங்கியது. மேலும் தொழுநோய் மறுவாழ்வு திட்டம், கண்ணொளி வழங்கும் திட்டம், சிறப்பு கல்வி உதவி தொகை, இலவச பஸ் பயண சலுகை, இந்து சமய கோயில் மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக 1700 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட செயலாக்கத்தை மாநில அரசு செயல்படுத்துகிறது. மாற்றுதிறனாளிகளின் தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையுடன் சம உரிமையோடு வாழ்வதற்கு தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் தற்போது வரை 45 ஆயிரத்து 538 மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. சுமார் 16 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 8 ஒன்றியங்களில் கலை நிகழ்வுகள் மற்றும் தெரு முனை நாடக நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்கள் வழங்குவதில் அவர்களை பராமரிப்பதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது. சென்ற வருடம் இதற்கான விருதை குடியரசு தலைவரிடம் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் நாமக்கல் மாவட்டம் முதன்மை மாவட்டமாக இந்தத் துறையில் திகழ வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

விழாவில், நாமக்கல் நகராட்சித் தலைவர் கலாநிதி, நகராட்சி கவுன்சிலர் சத்தியவதி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Dec 2022 10:09 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்