/* */

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: மாவட்ட திமுக ரூ.2.40 லட்சம் உதவித்தொகை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: மாவட்ட திமுக ரூ.2.40 லட்சம் உதவித்தொகை
X

நாமக்கல் நகரில் நடைபெற்ற, சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.40 லட்சம் உதவித்தொகையை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் வழங்கினார்கள்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ரூ. 2.40 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஐநாசபை அறிவிப்பின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் டிச. 3ம் தேதி சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும், பல சமூக சங்கங்களும் விழாக்காளை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ராஜ்யசபா எம்.பியுமான ராஜேஷ்குமார், நாமக்கல் சட்டசபை தொகுதி எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களை பராமரிக்கும் பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில், அணைக்கும் கரங்கள் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ.50 ஆயிரம், ஜே.கே.கே கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ.25 ஆயிரம், கலர்ஃபுல் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், ஏழின் 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்திற்கு ரூ. 25 ஆயிரம், சிவபாக்கியம் 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான மன வளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்திற்கு ரூ. 25 ஆயிரம், நியூ லைப் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம், கம்பத்துக்காரர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிக்கு ரூ. 25 ஆயிரம் என மொத்தம் 7 சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 437 மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்புக்காக ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

மேலும், குமாரபாளையம் ஜே கே கே சிறப்பு பள்ளியைச் சேர்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர் ராஜேஷ், பாக்கியலட்சுமி ஆகியோருக்கு ரூ. 25 ஆயிரம் ஊக்க தொகையும், ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி உதயகுமார் என்பவரின் மகன் நவீன் குமாரின் மருத்துவப் படிப்பிற்காக ரூ. 15 ஆயிம் கல்வி உதவித்தொகையும் என மொத்தம் ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம், கிழக்கு மாவட்ட திமுக சார்பில் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.

Updated On: 4 Dec 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...