கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைப் பாதை.(கோப்பு படம்)
மதுரை.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கனமழை எதிரொலி காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம், பாபநாசம், தென்காசி பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வைகை நதியில் அதிக தண்ணீரும், மலைப் பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருவதால் , சதுரகிரி சுந்தர மகாலிங்க பிரதோஷ தரிசனத்துக்கு பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என தெரிவிப்பட்டுள்ளது.
மதுரை அருகே திருவேடகம், படுகை அணையில் வைகை அணையில் குழந்தைகள் உல்லாசமாக ஆடி பாடி குளித்து வருகின்றனர். தண்ணீர் அதிகம் வரும் காலங்களில், திருவேடகம் பாபா கோயில் அருகே படுகை அணையில் குழந்தைகள் குளிக்க தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகாசி மாத பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை. மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில், ஞாயிறு மாலை பலத்த மழை பெய்தது. மதுரை நகர், விளாங்குடி, பரவை, அலங்காநல்லூர், சமயநல்லூர், தேனூர், வாடிப்பட்டி, நிலக்கோட்டை, பள்ளபட்டி, பாண்டியராஜபுரம், வத்தலக்குண்டு உள்ளிட்டு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மதுரை நகரில் பலத்த மழையால், சிட்டி பஸ்கள் கூட்ட நெரிசல் , சிக்கி காலதாமதமாக வந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu