/* */

நாமக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 29.22 சதவீதம் வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில் 29.22 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் 4 மணி நேரத்தில்  29.22 சதவீதம் வாக்குப்பதிவு
X

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில், தமிழக வனத்துறை அøமைச்சர் மதிவேந்தன், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் ஓட்டுப்போட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில், வாக்குப்பதிவு துவங்கிய 4 மணி நேரத்தில், 11 மணி நிலவரப்படி மொத்தம் 29.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, நாமக்கல் சட்டசபை தொகுதியில் மொத்தம் 2,57,915 வாக்காளர்கள் உள்ளனர், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 2,30,584 வாக்காளர்கள், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் 2,44,113 வாக்காளர்கள், பரமத்திவேலூர் தொகுதியில் 2,20,265 வாக்காளர்கள், திருச்செங்கோடு தொகுதியில் 2,30,415 வாக்காளர்கள், சங்ககிரி தொகுதியில் 2,69,270 வாக்காளர்கள் என, 6 சட்டசபை தொகுதியிலும் சேர்த்து மொத்தம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 562 வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நாமக்கல் பாராளுமன்ற தேர்தலில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், ஒரு ஓட்டுச்சாவடிக்கு 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்று காலை 7 மணி முதலே பொதுமக்கள் வாக்குச்சவாடிகளுக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை மொத்தம் 4 மணி நேரத்தில், ராசிபுரம் சட்டசபை தொகுதியில் 29.45 சதவீத வாக்குகளும், சேந்தமங்கலம் தொகுதியில் 31.43 சதவீத சதவீத வாக்குகளும், நாமக்கல் சட்டசபை தொகுதியில் 26.35 சதவீத வாக்குகளும், பரமத்திவேலூர் சட்டசபை தொகுதியில் 30.20 சதவீத வாக்குகளும், திருச்செங்கோடு சட்டசபை தொகுதியில் 29.31 சதவீத வாக்குகளும், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில்28.86 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. காலை 11 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 29.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Updated On: 18 April 2024 9:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...