/* */

மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை

மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மரவள்ளி பயிரில் செம்பேன் தாக்குதல் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை
X

பைல் படம்

மரவள்ளிக்கிழங்கு பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டு வருகிறது. நாமக்கல் வட்டாரத்தில் நிலவி வரும் பருவநிலை காரணமாக மரவள்ளி பயிரில் தற்போது, செம்பேன் பூச்சி தாக்குதல் பரவி வருகிறது. இந்த நோய் தாக்கிய மரவள்ளி செடிகளின், இலைகளின்அடியில் பூச்சிகள் காணப்படும். இலைகள் பச்சயம் இழந்து காய்ந்துவிடும். பின்னர் இலைகள் உதிர்ந்து, செடி காய்ந்துவிடும். இதனால் மகசூல் இழப்பு ஏற்படும்.

மரவள்ளிப் பயிரில் செம்பேன் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஓபரான் பூச்சிக்கொல்லி மருந்தை 2 மி.லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து செடிகளின் மீது தெளிக்க வேண்டும். அல்லது புரோப்பர் கைடு மருந்தை 2 மி.லிக்கு 1 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 4 கிராம் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு நாமக்கல் தோட்டக்கலை அலுவலர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 15 July 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?