/* */

நாமக்கல்லில் பிப். 1ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப். 1ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பிப். 1ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்

நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் பிப். 1ம் தேதி நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான நாமக்கல் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் பிப்.1ம் தேதி, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிகிறார்.

கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம், மேலும் தங்களின் குறைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 30 Jan 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  2. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  4. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  5. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  6. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  7. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  8. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்