சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!

சோழவந்தான் கோயிலில்  அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!

சோழவந்தான் சிவன் கோவிலில், பணி நிறைவு செய்த அச்சருக்கு, பாராட்டு விழா

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி பணி நிறைவு செய்தவருக்கு பாராட்டு விழா நடந்தது.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அர்ச்சகராக பணியாற்றி நிறைவு செய்த அர்ச்சகருக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. சோழவந்தான் சிவன் ஆலயத்தில், அர்ச்சகராக என். பரசுராமன் கடந்த பல வருடங்களாக பணியாற்றி வந்தார்.

அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு, பணி நிறைவு பாராட்டு விழாவானது, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய அன்னதான மண்டப வளாகத்தில், நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கோயில் செயல் அலுவலர் இளமதி தலைமை வைத்தார். கணக்கர் சி. பூபதி முன்னிலை வைத்தார்.

பணி நிறைவு செய்த பரசுராமனை பாராட்டி சால்வைகள், வெகுமதிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஜெனகை மாரியம்மன் கோவில் எழுத்தர் கவிதா, வசந்த், பெருமாள், பிரியா, மற்றும் ஆலயப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கிராம பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அர்ச்சகர் சண்முகவேல் நன்றி கூறினார்.

பல ஆண்டுகள் இந்த கோயிலில் பணியாற்றி ஓய்வு பெறும் அவரோடு பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கண்ணீரோடு நன்றி கூறினார். பலர் அவரது பணிகள் குறித்து பெருமையாக பேசி அவரை பாராட்டினார்கள்.

ஓய்வு என்பது வேலைக்கு மட்டுமே. மனது எப்பொதும் சுறுசுறுப்போடு இருந்தால் என்றும் நமக்கு இளமைதான். அதனால் ஓய்வு பெறும் எவரும் வேலையோடு நமது கடமைகள் முடிந்துவிட்டன என்று மனதில் தொய்வடையாமல் நமக்கு மகிழ்ச்சித்தரும் பிற பணிகளில் ஈடுபடலாம்.

Tags

Next Story