/* */

ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு

Namakkal news- விளைநிலங்களில் சாகுபடி பயிர்களை காப்பாற்ற, ராஜவாய்க்காலை திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
X

Namakkal news- ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து, பாசனத்திற்காக ராஜவாய்க்காலில் தண்ணீர் செல்லும் பகுதி. (பைல் படம்)

Namakkal news, Namakkal news today- ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் அதை நம்பி விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க ராஜவாய்க்காலை திறக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து, ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மொத்தம் 77 கி.மீ., தூரம் கொண்டது. இதன்மூலம் பரமத்தி வேலூர், மோகனூர் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வாய்க்கால் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும். அப்போது வாய்க்காலில் நீர் திறப்பு நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிந்தவுடன் வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும். இந்தாண்டு கடந்த பிப்., மாதம் ராஜவாய்க்காலில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்று வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 21ம் தேதி வாய்க்காலில் தண்ணீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ராஜவாய்க்கால் பாசனத்தை மையப்படுத்தி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மோகனூரைச் சேர்ந்த ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் குப்புதுரை கூறியதாவது: பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதியில் ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் பொய்யேரி, கொமராபாளையம், மோகனூர் வழியாக திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வரை பாய்ந்து செல்கிறது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் ராஜவாய்க்கால், பொய்யேரி மற்றும் கொமரபாளையம் வாய்க்காலில் ஆண்டுக்கு 350 நாட்கள் பாசன வசதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இச்சூழலில் கடந்த 21ம் தேதி ராஜவாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் வெற்றிலை, வாழை, கோரை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடும் வெயிலால் பயிர்கள் கரும் நிலை உருவாகியுள்ளது. இதை சமாளிக்க விவசாயிகள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு தீர்வு காணும் வகையில் ராஜவாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். மேட்டூர் அணையில் 51 அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டுகளில் அணையில் 35 அடி உயரம் தண்ணீர் இருக்கும்போதும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது 50 அடிக்கு அதிகமாக தண்ணீர் இருப்பதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Updated On: 1 May 2024 1:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!