கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
X
ராமாபுரத்தில் இளைஞர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

சென்னை ராமாபுரத்தில் நடந்த சென்ற இளைஞர் ஒருவரை வழி மறைத்து கத்திய காட்டி பணம் பறித்து சென்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை வழி மறைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றதாக பாதிக்கப்பட்ட இளைஞர் ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமாபுரம் போலிசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் ராமாபுரம் ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 44) பிரபல ரவுடி என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ராமாபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சுரேஷின் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் 20க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!