/* */

மோகனூர் அருகே கரசபாளையம் ஏரியில் காவிரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் பயன்படும் வகையில் கரசபாளையம் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

மோகனூர் அருகே கரசபாளையம் ஏரியில்  காவிரிநீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
X

மோகனூர் அருகே உள்ள கரசபாளையம் ஏரியை,  விவசாய சங்க பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகில் உள்ள சர்கார்வாழவந்தி கிராமம், கரசபாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரிப்பகுதியினை சுற்றி உள்ள விவசாயிகள், மழைக்காலங்களில் காவிரி ஆற்றின் உபரி நீரையும் அல்லது திருமணிமுத்தாறு மற்றும் கொமாரபாளையம் வாய்க்காலில் இருந்து வரும் உபரிநீரையும் ஏரியில் நிரப்பி விவசாயத்திற்கு பயன்படுத்த உதவ வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக மோகனூரில் நடைபெற்ற விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிவசாமி வரவேற்றார். பாலப்பட்டி கொமாரபாளையம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ண சேகர் தலைøமை வகித்தார். விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

விவசாய முன்னேற்றக் கழகத்தலைவர் செல்ல ராசாமணி பேசியதாவது: இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஒரே தீர்வு கரசபாளையம் ஏரியில் நீரை நிரப்புவதுதான். அதற்காக இந்த பகுதியின் தன்னார்வலர்களும், அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி முயற்சி எடுக்க வேண்டும்.

இது குறித்து விரைவில் தமிழக நீர்பாசனதுறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்படும். நாமக்கல் மாவட்ட கலெக்டர், எம்எல்ஏ மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த ஏரி 184 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

இந்த ஏரியில் நீர் நிரப்பும் பொழுது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், ஏரியைச் சுற்றியுள்ள 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்போது, சுற்றியுள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் பாசனவசதி பெறும். ஏரியைச் சுற்றியுள்ள நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

இக்கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மோகனூர் ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணி, மாதேஸ்வரன், வேலுச்சாமி, தண்டபானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்