/* */

முட்டை விலை 20 பைசா திடீர் சரிவு; ஒரு முட்டை ரூ. 5.30

Namakkal news- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முட்டை விலை 20 பைசா திடீர் சரிவு; ஒரு முட்டை ரூ. 5.30
X

Namakkal news-முட்டை விலை 20 பைசா திடீர் சரிவு (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டை விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக தினசரி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதை பண்ணையாளர்கள் கடைபிடித்து வருகின்றனர். கடந்த 7ம் தேதி ரூ. 4.60 ஆக இருந்த முட்டை விலை 5 பைசா உயர்ந்து ரூ. 4.65 ஆனது. 8ம் தேதி மீண்டும் 5 பைசா உயர்ந்து ரூ. 4.70 ஆனது. 9ம் தேதி மேலும் 10 பைசா உயர்ந்து ரூ. 4.80 ஆனது. 10ம் தேதி ஒரே நாளில் 60 பைசா உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.40 ஆனது. 11ம் தேதி 5 பைசாவும், 12ம் தேதி 5 பைசாவும் உயர்ந்து ஒரு முட்டையின் விலை ரூ. 5.50 ஆனது. இந்த நிலையில், நேற்று மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற, என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா சரிவடைந்து ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 600, பர்வாலா 435, பெங்களூர் 595, டெல்லி 500, ஹைதராபாத் 530, மும்பை 600, மைசூர் 597, விஜயவாடா 530, ஹொஸ்பேட் 550, கொல்கத்தா 540.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ. 138 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ மைனஸ் இல்லாத விலை ரூ. 97 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் (சிகா) நிர்ணயித்துள்ளது.

Updated On: 15 Jun 2024 12:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!