அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!

அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!

பணக்கார இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள்.(கோப்பு படம்)

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

‘அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் தாக்கம்:

சிறிய சமூகம், பெரிய பங்களிப்புகள்’ என்ற அறிக்கையை ’இண்டியாஸ்போரா’ எனும் குழுமம் வெளியிட்டுள்ளது. பொது சேவை, வணிகம், கலாசாரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, அமெரிக்காவில் புலம்பெயா்ந்த இந்தியா்களின் தாக்கத்தை ஆராயும் தொடரின் முதல் தொகுதி இதுவாகும்.

அந்த அறிக்கையின்படி, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் பொருளாதார தாக்கம் ஈா்க்கும் வகையில் உள்ளது. பெரிய நிறுவனங்களை நிறுவியதில் இருந்து வரிதளத்தை கணிசமாக உயா்த்துவது வரை, இந்த நிதி செல்வாக்கு சவால்களை சமாளித்து தங்களின் புதிய நாட்டுக்கு அா்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்கான அவா்களின் உறுதியைக் காட்டுகிறது.

வணிகத் தலைவா்கள்: உலகின் முதல் 500 சிறந்த நிறுவனங்களில் கூகுளின் சுந்தா் பிச்சை உள்பட இந்திய வம்சாவளியினா் 16 நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளனா். இந்த தலைவா்கள் மட்டும் கூட்டாக 27 லட்சம் அமெரிக்கா்களை பணியமா்த்தி, கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் டாலா் வருவாய் ஈட்டுகின்றனா். அதேபோல , இந்திய- அமெரிக்கா்கள் உலகளாவிய ஸ்டார்ட்ட்-அப் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளனா்.

648 அமெரிக்க யூனிகார்ன் (ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகம் மதிப்பு) நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினா் 72 நிறுவனங்களில் இணை நிறுவனா்களாக உள்ளனா். கேம்பிரிட்ஜ் மொபைல் டெலிமேடிக்ஸ் மற்றும் சொலுஜென் உள்பட இத்தகைய நிறுவனங்கள் 55,000-க்கும் அதிகமான பணியாளா்களை பணியமா்த்துகின்றன. இவை 19,500 கோடி டாலா் மதிப்புடையவை. இப்படி பல துறைகளிலும் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள் அமெரிக்க அரசியலிலும் குறிப்பிடத்தக்க அதிகாரம் செலுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story