இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
சீன மொபைல் போன்கள் - கோப்புப்படம்
சீனாவுடன் வணிக உறவு வைத்துக்கொள்வதை இந்தியா சிறிதும் விரும்பாத நிலையில் சீனாவில் உற்பத்தியாகும் போன்களின் விற்பனைக்கு கை கொடுக்கும் முதல் மற்றும் முக்கிய நாடாக இந்தியா தான் இருந்து வருகிறது என்பது ஒரு வித்தையான நிகழ்வாகவே உள்ளது.
சீனாவின் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் விற்பனை கடந்த 2020ம் ஆண்டில் மிக உச்ச அளவை எட்டியிருந்த நிலையில், அடுத்த 2 ஆண்டுகளில் மெதுவாக குறையத் துவங்கியது. ஆனால் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் உயரத் துவங்கிய இதன் விற்பனை இன்னமும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. விற்பனை உயர்ந்த போதிலும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் அதிகமான உயர்வு ஏற்படவில்லை. அதிக விலையுள்ள ஐ - போன்களில் சாம்சங் நிறுவனத்தின் விற்பனை அதிகமாக இருந்தது.
இதற்குக் காரணம், சீனாவின் போன்களான ஷாவ்மீ, விவோ, ஒப்போ, ரியல்மீ, ட்ரான்ஷன் மற்றும் மோட்டோராலா ஆகிய போன்களின் விற்பனை கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை இந்தியாவின் மொத்த விற்பனையில் 61 சதவீதம் என்ற குறைந்த அளவில் இருந்தது. ஆனால் சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இவற்றின் மார்க்கெட் பங்கு 75 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஷாவ்மீ மற்றும் விவோ ஆகியவற்றின் விற்பனை குறைந்ததை அடுத்து அவற்றுக்காக தனிப்பட்ட ஷோரூம்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எந்த முயற்சியும் இல்லாமல் ட்ரான்ஷன் மற்றும் மோட்டோராஸா ஆகிய போன்களின் விற்பனை கடந்த மூன்று மாதங்களில் அதிவேகமாக பல மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் சீனப் போன்களின் மார்க்கெட் பங்கு 77 சதவீதம் என்ற உயர்ந்த நிலையில் இருந்தது. ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையை அடுத்து சீன நிறுவனங்களின் மீது பொருளாதார ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் இவற்றின் விற்பனை குறையத் துவங்கியது. சீன நிறுவன அதிகாரிகள் பலரும் அப்போது கைது செய்யப்பட்டனர். 7 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விலையில் வெளியிடப்பட்ட சீனப் போன்களின் இந்திய மார்க்கெட் அளவு கடந்த 6 மாதங்களாக 70 சதவீதம் என்ற அளவில் நிலையாக உள்ளது என சைபர்மீடியா ரிசர்ச் என்ற அமைப்பு கூறியுள்ளது.
மேலும் 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ஆயிரம் ரூபாய் வரையிலான விலைக்கு விற்கப்படும் போன் களின் இந்திய மார்க்கெட் பங்கு 2020 ஆம் ஆண்டில் 2 சதவீதமாக இருந்த நிலையில் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது முதல் காலாண்டில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் சைபர்மீடியா கூறியுள்ளது.
ஏறத்தாழ அனைத்து சீன பிராண்ட் போன்களின் விற்பனையும் இந்த ஆண்டின் முதல் காலாண்டிவ் உயர்ந்தே உள்ளது. ஷாவ்மீ போன்களின் விற்பனை நேரடியாக ஷோரூம்களில் விற்கப்பட்டதை அடுத்து இதன் விற்பனை 28 சதவீதம் உயர்ந்துள்ளது. கவர்ச்சிகரமான டிசைன்களில் வெளியாகும் மோட்டோராலா போன்களில் ஆண்ட்ராய்ட் செயல்பாடு சிறப்பாக உள்ளதால் அவற்றின் விற்பனை 58 சதவீதம் அதிகரித்துள்ளது என இந்திய விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2023ம் ஆண்டில் இந்திய விற்பனையில் முதலிடத்தில் இருந்த சாம்சங்கை தற்போது 2 வது இடத்தில் உள்ள ஷாவ்மீ மிக தெருக்கமாகத் தொடர்கிறது. இந்தியாவில் நேரடி விற்பனையை அதிகரித்ததன் மூலம் இதன் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.
ஆனால் வருவாயைப் பொறுத்த வரை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சீன நிறுவனங்களின் வருவாயின் பங்கு 48 சதவீதமாகவே உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டில் 71 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் வெகுவாகக் குறைந்துள்ளது. அதிக விலையுள்ள பிரீமியம் போன்களை விற்பனை செய்யும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் விற்பனை வருவாய் அதிகமாக உள்ளது.
முன்னர் பிரீமியம் போன்களை விற்பனை செய்து வந்த ஒன்பிளஸ் போன் நிறுவனம் பட்ஜெட் போன்களை வெளியிட்டதை அடுத்து அதன் மார்க்கெட் பங்கு வெகுவாகச் சரிந்து விட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu