/* */

சென்னை- தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை

சென்னை - தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சென்னை- தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
X

கோப்பு படம்

சென்னை - தேனி எக்ஸ்பிரஸ் ரயில், நாமக்கல்லில் நின்று செல்ல வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நாமக்கல் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஏற்று, நாமக்கல் வழியாக சேலம் - கரூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இவ்வழியாக சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் போன்ற ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. கொரோன பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் மதுரை - தேனி புதிய அகல ரயில் பாதை பணிகள் முடிந்து அதிவேக ரயில் இயக்கி பரிசோதனை நடத்தப்பட்டது. அடுத்த மாதம் முதல் பயணிகள் ரயில், இந்த புதிய ரயில் பாதையில் இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாமக்கல் வழியாக வாரத்திற்கு மூன்று முறை, மதுரை வரை இயங்கி கொண்டிருக்கும் 06019/20 எண் கொண்ட சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் அதிவேக ரயில், தேனி வரை நீட்டிக்க ரயில் வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.

மதுரை - தேனி புதிய பாதையில் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி போன்ற சிறிய ஊர்களில் இந்த ரயில் நின்று செல்ல பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட தலைநகரான நாமக்கல்லில், இந்த ரயில் நிற்பது இல்லை.சென்னை சென்று வர நாமக்கல் மக்கள் பெரிதும் நம்பி இருப்பது சென்னை சென்ட்ரல் பாலக்காடு வண்டியைத்தான். இந்த வண்டி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர் வழியாக இயங்குவதால் நாமக்கல் மக்களுக்கு எளிதாக பயணச்சீட்டு கிடைப்பது இல்லை.

சென்னை சென்ட்ரல் - மதுரை - சென்னை சென்ட்ரல் அதிவேக ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் பட்சத்தில், நாமக்கல் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். எனவே ரயில்வே நிர்வாகம் உடனே தலையிட்டு ரயில் தேனி வரை நீட்டிக்கும் பொழுது நாமக்கல்லுக்கு நின்று செல்ல அனுமதி வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 14 Sep 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்