/* */

காலாவாதியான நெடுஞ்சாலை சுங்க சாவடிகளை மூடக்கோரி விரைவில் முற்றுகைப் போராட்டம்

Protest News -தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி விரைவில், முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

காலாவாதியான நெடுஞ்சாலை சுங்க சாவடிகளை மூடக்கோரி விரைவில் முற்றுகைப் போராட்டம்
X

செல்ல ராஜாமணி, தலைவர், தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு.

Protest News -தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி விரைவில், முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு மாநில தலைவர் செல்லராஜாமணி, இந்தியா முழுவதும் இரண்டு ஆண்டுகள் கொரோனா ஊரடங்கால் மோட்டார் போக்குவரத்து தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சுமார் 50 சதவீத வாகனங்கள் மட்டுமே இயங்குகிறது. தமிழகத்தில் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தும் மணல் குவாரிகள் இயக்கப்படாமல் உள்ள பல லட்சம் மணல் லாரிகள் ஓட்ட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை திருப்பிச்செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மோட்டார் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி, இன்சூரன்ஸ் பிரிமியம் உயர்வு, நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் உயர்வு போன்ற பிரச்சினைகளால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 537சுங்கச்சாவடிகள் அரசு நிர்ணயித்த காலம் முடிவடைந்துள்ள நிலையிலும் அவற்றை மூடாமல், அவற்றின் வழியாகச் செல்லும் வாகனங்களக்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டன. அதிலும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல் உள்ளிட்ட 23 சுங்கச்சாவடிகள் நீண்ட நாட்களுக்கு முன்வே காலாவதியாகியுள்ளன. இருப்பினும் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதுடன் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்திக்கொண்டே செல்கின்றனர்.

லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு, சாலை வரியைப் போல் ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணத்தை மொத்தமாக வசூலிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம் ஆனால் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதேபோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்த டீசல் விலை உயர்வைக்கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் எடுபடவில்லை. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் தமிழகத்தை விட டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.8 விலை குறைவாக விற்டுபனை செய்யப்படுகிறது.

தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைப்போம் என்றார். ஆட்சியமைத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்னும் டீசல் விலையைக் குறைக்கவில்லை.

லாரி உரிமையாளர்களின் முக்கிய பிரச்சினைகளை கவனத்தில் கொள்ளாமல், ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நிர்வாகிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். பல போராட்டங்கள் அறிவித்து அவற்றை ஒத்திவைப்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். கடந்த 6ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற தென்னிந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கூட்டத்தில், இந்தியாவில் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடக்கோரி வருகிற 18ம் தேதி, குஜராத் மாநிலம் வாபியில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அதன் பொதுச்செயலாளர் சன்முகப்பா அறிவித்துள்ளார்.

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று உள்ளதால், அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. போராட்டத்திற்கு அனுமதி தர மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே தமிழகத்தில் உள்ள காலாவதியான நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளை மூடக்கோரி, விரைவில் மாநிலம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

போட்டியின் போது, தமிழக மோட்டார் போக்குவரத்து சம்மேளன பொருளாளர் பொன்னுசாமி, பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Nov 2022 3:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  2. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  6. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...