ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து பாதிப்பு
X

சாலையில் விழுந்த மூங்கில் மரங்கள்.

ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் பலத்த சூறைக் காற்றால் சாலையோர வனப்பகுதி மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசனூர் பகுதியில் பலத்த சூறைக் காற்றால் சாலையோர வனப்பகுதி மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து மைசூா் செல்லும் சாலை தமிழ்நாடு - கா்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக இரு மாநிலங்களுக்கு இடையே பேருந்து மற்றும் சரக்கு வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் மலைப்பகுதியில் இன்று (மே.15) புதன்கிழமை மதியம் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆசனூா் - திம்பம் சாலையில் 2க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர வனப்பகுதியில் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்தன.

இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனையடுத்து, சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களை வனத்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு வாகன போக்குவரத்து தொடங்கியது. இருந்தபோதிலும், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!