/* */

நாமக்கல்லில் நாளை பாஜ தலைவர் அண்ணாமலை நடை பயணம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை நாமக்கல்லில் பாத யாத்திரை நடத்தி பொது மக்களிடையே பேசுகிறார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் நாளை பாஜ தலைவர் அண்ணாமலை நடை பயணம்
X

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை நாமக்கல்லில் பாத யாத்திரை நடத்தி பொது மக்களிடையே பேசுகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணம் மேற்கொண்டு, சட்டசபை தொகுதி வாரியாக பொது மக்களை சந்தித்து வருகிறார். அவர் நாளை 28 ம் தேதி சனிக்கிழமை, நாமக்கல் சட்டசபை தொகுதியில் நடை பயணம் மேற்கொள்கிறார். நாளை மாலை 3 மணிக்கு நாமக்கல் சேலம் ரோட்டில் காம்ப்லெஸ் தியேட்டர் அருகில் இருந்து நடை பயணத்தை துவக்குகிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை,. நாமக்கல் நகரில், சேலம் ரோடு கார்னர், நேதாஜி சிலை, பலபட்டறை மாரியம்மன் கோயில், மெயின் ரோடு, பஸ் நிலையம், மணிக்கூண்டு, பரமத்தி ரோடு வழியாக நடைபயணமாக செல்கிறார். வழி நெடுகிலும் பொதுமக்களை சந்தித்து பேசும் அவர், பரமத்தி ரோட்டில், தில்லைபுரம் அருகில் பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பொதுமக்களிடையே பேசுகிறார்.

பாஜக மாநில துணை தலைவர்கள் டாக்டர் ராமலிங்கம், வி.பி. துரைசாமி, கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சத்யமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட திரளான பாஜகவினர் நடை பயணத்தில் கலந்துகொள்கின்றனர். நடை பயணத்தை முன்னிட்டு நாமக்கல் நகரம் முழுவதும் பாஜக கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

Updated On: 27 Oct 2023 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்