/* */

தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகளம், குழு விளையாட்டு: நாமக்கல்லில் துவக்கம்

தமிழக முதல்வர் கோப்பை போட்டிக்கான, மாவட்ட அளவில் தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது.

HIGHLIGHTS

தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகளம்,  குழு விளையாட்டு: நாமக்கல்லில் துவக்கம்
X

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழக முதல்வர் கோப்பைக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

நாமக்கல் ம õவட்ட விளையாட்டு மைõதனத்தில், தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தலைமை வகித்து துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவியருக்கான 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டப்பந்தம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டமாணன மாணவியர் பங்கேற்றனர். இறகுப் பந்து போட்டியில், 120 பேரும், வாலிபால் போட்டியில், 9 அணிகளைச் சேர்ந்த 108 பேரும் என, மொத்தம் 628 மாணவியர் கலந்து விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

போட்டியில், முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு முறையே, ரூ. 3,000, 2,000, 1,000 ரூபாய் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்படும். பிப்ரவி 4ம் தேதி துவங்கி, வரும், 10ம் தேதி வரை, பள்ளி மாணவ, மாணவியருக்கு வாலிபால், கால்பந்து, சிலம்பம், மேசைப்பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல், மட்டைப்பநது , ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அதேபோல், வரும், 6ம் தேதி துவங்கி, 14 வரை, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, நீச்சல், இறகுப் பந்து, தடகளம், கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, மட்டைப்பந்து, சிலம்பம், ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும், வரும் 13 மற்றும் 15ம் தேதிகளில், அரசு ஊழியர்களுக்கு, கபடி, தடகளம், வாலிபால், இறகு பந்து போட்டிகளும், வரும் 14ம் தேதி, பொது பிரிவினருக்கு, கபடி, தடகளம், சிலம்பம், வாலிபால், இறகுபந்து, மட்டைபந்து ஆகிய போட்டிகளும், வரும் 15ம் தேதி, மாற்றுத்திறனாளிகளுக்கு, கபடி, தடகளம், சிறப்பு கையுந்துபந்து, இறகுப்பந்து, எறிபந்து போட்டிகளும் நடைபெற உள்ளது.

அனைத்து போட்டிகளிலும், வெற்றி பெறுபவர்களுக்கு, மொத்தம் ரூ. 41.58 லட்சம் மதப்பிலான பரிசுத்தொகை வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Feb 2023 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...