/* */

புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி

புதுச்சத்திரம் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற கணவன், மனைவி உயிரிழந்தனர். 2 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

புதுச்சத்திரம் அருகே கார் விபத்து: டூ வீலரில் சென்ற கணவன், மனைவி பலி
X

பைல் படம்.

சேலம் தாதகாப்பட்டி, வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (34). தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி தமிழ்செல்வி (30). இவர்களுக்கு அக்ஷயா (7), பிரகதி (3) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில், நாமக்கல் மாவட்டம், களங்காணியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்தனர்.

சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், பாச்சல் மேம்பாலத்தில் சென்றபோது, அவர்களுக்குப் பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. விபத்தில், செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருகில் இருந்தவர்கள், தமிழ்செல்வனையும் குழந்தைகளையும் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்வன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் அக்ஷயா, பிரகதி ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 21 Feb 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு