/* */

ஜவுளிக்கடை உரிமையாளர் கொரோனாவால் உயிரிழப்பு

ஜவுளிக்கடை உரிமையாளர் கொரோனாவால் உயிரிழப்பு
X

நாகப்பட்டினம் அருகே பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் கொரோனாவால் உயிரிழந்தார். இதனால் கடையில் பணிபுரிந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தவறியதால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்த பிரபல ஜவுளி கடை உரிமையாளரான பாபு என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே அந்த ஜவுளிக்கடையில் பணிபுரிந்த 30க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் இருப்பதற்காக ஜவுளி கடையை மூடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவரது உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Updated On: 23 March 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!