/* */

கொரொனாவால் முன்னதாக நடைபெற்ற தீமிதி திருவிழா

நாகப்பட்டினத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக முன்னதாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த வாழ்மங்கலம் மழை மாரியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, பூச்சொரிதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, தமிழக அரசின் கொரொனா கட்டுப்பாடு காரணமாக குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாகி அழகன் என்ற செளரிராஜன் செங்குந்தர் செய்திருந்தார்.

Updated On: 10 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...