/* */

கரூரில் கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை. அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கரூரில் கொரோனா நிவாரண நிதி ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
X

 கரூரில் இன்று கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக இந்த மாதமே ரூ.2000 வழங்க உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இன்று கரூர் அருகில் உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தில் கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்திட கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அரசிடம் முறையாக பதிவு செய்து வெளியில் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடி படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும், கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள 590, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் 2 என மொத்தம் 592 நியாய விலைக் கடைகள் மூலம். 3,11,511 குடும்பங்களுக்கு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ 2 ஆயிரம் வீதம் 62 கோடியே 30 லட்சம் வழங்கப்படுகிறது.

Updated On: 15 May 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  3. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  4. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  5. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  6. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  7. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  8. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  9. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!