/* */

குமரியில் சுற்றுலா பயணிகளின் ஆபத்தான செயல்பாடு: போலீஸார் தடுக்க வேண்டும்

குமரியில் சுற்றுலா பயணிகளின் ஆபத்தான செயல்பட்டால் தடுக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்

HIGHLIGHTS

குமரியில் சுற்றுலா பயணிகளின்  ஆபத்தான செயல்பாடு:  போலீஸார் தடுக்க வேண்டும்
X

ஆபத்தை உணராமல் கன்னியாகுமரி கடற்கரையில் உலாவும் சுற்றுலா பயணிகள்

முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்கு அமைந்துள்ள கடற்கரைகள், பூங்காக்கள், சூரிய உதயம், சூரிய அஸ்தமம் உள்ளிட்ட இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.

கடலின் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் வானுயர் திருவள்ளுவர் சிலை போன்றவற்றை சுற்றுலா படகில் சென்று பார்வையிட்டு மகிழ்வது வழக்கம். இதனிடையே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்லவும், பார்வையிடவும் அரசு தடை விதித்தது, மேலும் ஞாயிற்று கிழமை முழு ஊராடங்கையும் அரசு அறிவித்தது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைகள், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்கள் அமைக்கப்பட்டு அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்லவும் பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டது.

ஆனால் கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கான சுற்றுலா படகு போக்குவரத்து மட்டும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.இந்நிலையில் நோய் தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்த அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊர டங்கையும் ரத்து செய்தது.

இந்நிலையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையிலும் குமரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் பார்வையிடவும் தொடர்ந்து தடை நீடித்து வருவதால் முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.மேலும் நேர் வழி அடைக்கப்பட்டு உள்ளதால் மாற்று பாதைகளை நாடும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் பாறைகள், மற்றும் வழுக்கு பாறைகள் வழியாக கடற்கரைக்கு செல்வதோடு ஆபத்தான இடங்களில் நின்று செல்பி எடுத்து வருகின்றனர்.

தற்போது அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் பாதுகாப்பு இல்லாததால் ஆபத்து குறித்து தெரியாமல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்புகள் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 30 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  5. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  6. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  7. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  8. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  9. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  10. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து