/* */

காஞ்சிபுரம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள்.

கடந்த மாதம் காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலியாகியும் , 15 நபர்கள் காயமடைந்தும் சிகிச்சை பெற்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள்.
X

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சி ஐ டி யு மற்றும் வேர்கள் அறக்கட்டளையினர்.

காஞ்சிபுரம் அடுத்த வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் மதியம் 12 மணி அளவில் உராய்வு மற்றும் தட்பவெட்ப நிலை காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டு 27 பேர் காயம் அடைந்ததில் சம்பவ இடத்திலே நான்கு பேர் பலியானார்.

பலத்த தீ காயங்களுடன் காஞ்சிபுரம் செங்கல்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு தலைமை மருத்துவமனைகளில் 23 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தீக்காயங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட எட்டு நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இந்நிலையில் தனியார் பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீ விபத்து நடைபெற்ற இடங்களை அமைச்சர்கள், ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு அப்பகுதியில் செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த தீ விபத்தில் உயிரிழந்த எட்டு குடும்பங்களுக்கு அரசு நிவாரணமாக ரூபாய் 3 லட்சம் மாவட்ட ஆட்சியரால் அளிக்கப்பட்டது. தீக்காயுடன் கடந்த வாரம் வரை 10க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்த நிலையில் ஒவ்வொருவராக வீடு திரும்பினர்.

சிகிச்சை பெற்று இருந்தாலும் அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை ஆகியவை கருத்தில் கொண்டு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினில் இருந்து கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குருவிமலை கிளை மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டு அறக்கட்டளையின் இயக்குனர் நளினி மோகன் சிஐடியு மாவட்ட செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் இன்று அக்குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருபத்தைந்து கிலோ அரிசி ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்கள், ஐந்து கிலோ கோதுமை மாவு உள்ளிட்டவைகளை வழங்கினர்.

மேலும் இவர்களது மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பட்டாசு ஆலை உரிமையாளர் இடமிருந்து நிவாரணத் தொகை பெற்று தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வேர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள், சிஐடியு வட்ட செயலாளர் பழனி , கிளை செயலாளர் சி. ஞானசம்பந்தம், சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தமிழகத்தின் ரோட்டோரம் கிடைக்கும் அமிர்தம்!
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தேனி
    தேனி, சோத்துப்பாறையில் கொட்டித்தீர்த்த மழை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருநெல்வேலி
    தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
  7. திருவள்ளூர்
    கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
  8. நாமக்கல்
    வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பள்ளி சிபிஎஸ்இ தேர்வுகளில் சாதனை
  9. வந்தவாசி
    வந்தவாசி அருகே நள்ளிரவில் தொடர் மின் தடை: பொதுமக்கள் மறியல்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்