தாமிரபரணி நதிக்கரையில் வைகாசி ஆரத்தி பெருவிழா!
ஆரத்தி நடைபெறும் இடங்கள்:
21.5.2024- செவ்வாய்க்கிழமை காரையாறு, அகத்தியர் அருவி.
22.5.2024- புதன்கிழமை காலை 8:00 மணி- பாபநாசம்.
காலை 10 மணி -அம்பாசமுத்திரம்.
மாலை 4 மணி - புன்னைக் காயல்.
23.5.2024 முதல் 27.5.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து படித்துறைகளிலும் நடக்கிறது.
அகத்திய பெருமான்- அன்னை தாமிரபரணி திரு உரு விக்கிரகத்துடன் பொதுமக்கள் தங்கள் கரங்களால் தீர்த்த வாரி செய்து நதிக்கு ஆரத்தி செய்யப்படும்.
இடங்கள்: சேர்ந்த பூ மங்கலம், முக்காணி,
உமரி காடு, வாழவல்லான், ஏரல், மங்கல குறிச்சி, இரட்டை திருப்பதி, ஸ்ரீவைகுண்டம், ஆத்தூர், சொக்கப்பழங்கரை, சேதுக்கு வாய்தான், குரங்கணி, தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகரி, புதுக்குடி, முறப்பநாடு, கருங்குளம்.
28.5.2024 மற்றும்29.5.2024 (செவ்வாய் புதன்)
கன்னியாகுமரி மாவட்டம். பொதுமக்கள் தங்கள் கரங்களால் விக்ரகத்திற்கு தீர்த்த வாரியும், நதிக்கு தீபஆராதனையும் செய்யும் இடங்கள்: மூவாற்றுமுகம், சிதறால், வெள்ளாங்கோடு, திருவிக்ரமபுரம், குளிச்சல், திக்குறிச்சி, சென்னித்தோட்டம்,தேங்காய் பட்டணம்.
30.5.2024 முதல் 5.6.2024 வரை திருநெல்வேலி மாவட்டம்.
பொதுமக்கள் தங்கள் கரங்களால் விக்கிரகங்களுக்கு தீர்த்த வாரியும், நதிக்கு தீபா ராதனையும் செய்யும் இடங்கள்.
சீவலப்பேரி, செப்பறை, அருகன் குளம்,
மணிமுத்தீஸ்வரம், சிந்து பூந்துறை,வண்ணாரப்பேட்டை, கொக்கர குளம், குறுக்குத்துறை, மேலநத்தம், கருப்பந்துறை, கோபாலசமுத்திரம், திருவேங்கடநாதபுரம், சுத்தமல்லி, மேலச்செவ்வல், கரிசூழ்ந்தமங்கலம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், அரியநாயகிபுரம், தென் திருபுவனம், முக்கூடல், திருப்புடைமருதூர்,அத்தாள நல்லூர், கல்லிடைக்குறிச்சி. நிகழ்ச்சி ஏற்பாடுகள் அந்தந்த ஊர் பொறுப்பாளர்களும், பொதுமக்களாலும் இணைந்து நடத்தப் பெறும். பயண திட்டத்திற்கு ஏற்ப அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நிர்வாக சுவாமிஜிகளும், அந்த அந்த மாவட்டத்தின் சுவாமிஜிகளும், மாதாஜிகளும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வார்கள். நிகழ்ச்சி பொறுப்பாளர்களும், ஆர்வமுள்ள தன்னார்வலர்களும்
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
8056149099 / 9677931223.
இப்படிக்கு: அனைவரையும் அன்புடன் ஒருங்கிணைக்கும் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் நதிகளின் ஒருங்கிணைப்பாளர் அன்னை ஞானேஸ்வரி கிரி. அனைவரும் வருக வருக!!. நம் உயிர் தாயான நதியினை
போற்றுவோம்! பாதுகாப்போம்! தூய்மையுடன் வைத்திருப்போம் என சபதம் ஏற்போம்.!.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu