கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் ஏறிய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் இருந்து அரக்கோணத்திற்கு தடம் எண் ட்டி 44 என்று அரசு பேருந்து இயங்கி வருகிறது . இந்நிலையில் பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணம் செல்லும் அரசு பேருந்து காலை புறப்பட தயாராக இருந்தது.
இந்த பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் ( வயது 42) டிக்கெட்டுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று இளைஞர்களும் எங்களிடமே டிக்கெட் கேட்கிறாயா? என கேட்டு அந்த மூன்று இளைஞர்களும் கண்டக்டர் ஐயப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த கண்டக்டர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பேருந்தில் தாக்கியவர்கள் குறித்து மப்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பேரம்பாக்கம் புதிய காலனியை சேர்ந்த அய்யனார் மகன் ராகேஷ்( வயது 21), இருளஞ்சேரி கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்த பாரத் மகன் முகேஷ்( வயது 20), அரக்கோணம் தாலுக்கா பழைய கேசாவரம் பகுதியை சேர்ந்த செந்தில்ராஜ் மகன் குணால் ( வயது 19) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
. கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். கஞ்சா போதையில் கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu