/* */

சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்

விதி‌மீறலுக்கு ஓட்டுநர்கள் பொய்யான காரணங்களை கூறுவதும் , ஒரு சில நேரங்களில் அவதூறாக பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு

HIGHLIGHTS

சாலை விதிகளை மீறும் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள்
X

ஜவஹர்லால் மார்கெட் வழியாக போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்து.

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, வேலூர் செல்லும் பேருந்துகள்‌, கச்சபேஸ்வரர் கோயில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு , ஓலிமுகமதுபேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலை அடைந்து சென்னை செல்ல அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இதனை அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள் பல்வேறு காரணங்களை கூறி சங்கர மடம் வழியாக வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதேபோல் கிழக்கு ராஜ வீதி வழியாகவும் வருவதால் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.

இதை கேட்கும் போக்குவரத்து காவலர்களிடம் சாலை பழுது, இடை நில்லா பேருந்து, விரைவு பேருந்து என பொய் காரணங்களை கூறுகின்றனர். ஓரு சில நேரம் பொதுமக்கள் முன்னிலையில் அவதூறாக வரும் பேசுகின்றனர்.

இதனால் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் தங்களை சரிவர பணி பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.அரசு ஊழியர்களே அரசு விதிகளை மீறுவது எவ்விதத்தில் நியாயம்.

இவர்களால் மற்ற வாகன ஓட்டிகளை‌ எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் போக்குவரத்து காவலர்கள் கவலையடைந்துள்ளனர்.

போக்குவரத்து அலுவலர்கள் உரிய போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க மறுக்கும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 4 May 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்