/* */

வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்டம் விழிப்புணர்வு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும் என்று கலெக்ர் ஆர்த்தி தெரிவித்தார்.

HIGHLIGHTS

வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிகளில் போக்சோ சட்டம்  விழிப்புணர்வு: கலெக்டர் தகவல்
X

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி மாணவ, மணவிகளுடன் கலெக்டர் ஆர்த்தி போக்சோ விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

கடந்த சில வருடங்களாகவே பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து பல மாணவிகள் அச்சம் காரணமாக உயிர் இழக்கும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதைப் போக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து குறிப்பாக இளம் மாணவிகளை காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அறிந்திடும் வகையில் அனைத்து மாவட்ட பள்ளி கல்வி துறை அலுவலர்களும் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி முன்பு போஸ்கோ சட்டம் குறித்து அறிந்து கொள்வேன் என உறுதி மொழியும் , அங்கு அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பதாகை கையொப்பமும் இட்டனர்.

பள்ளி மாணவ, மாணவிகளுடன் உரையாடிய போது , மாணவிகள் போக்ஸோ சட்டம் குறித்து அறிந்து கொண்டு அனைத்து நண்பர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் பள்ளி வார இறுதி நாட்களின் பாட வகுப்பு போஸ்கோ சட்ட விழிப்புணர்வு குறித்து இருக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் , ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

Updated On: 10 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது