/* */

நீட் தேர்வு : அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதியதில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த 5 மாணவிகள் அதிக மதிப் பெண் பெற்று தேர்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

நீட் தேர்வு : அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி
X
பைல் படம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 52 அரசு நகராட்சி ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் 2021 நீட் தேர்வில் 209 பேர் கலந்து கொண்டனர்.

இதில் அரசு பள்ளி மாணவர்கள் 200 பேரும் நகராட்சிப் பள்ளியை சேர்ந்த நான்கு பேரும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியை சேர்ந்த ஐந்து நபர்கள் என 200 பேர் கலந்து கொண்டனர்.

தமிழ் வழி கல்வியில் பயின்ற 110 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் பயின்ற 99 மாணவ, மாணவிகள் என மொத்தம் 250 பேர் கலந்து கொண்டனர்.

இதில் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.தரணிஸ்ரீ 447 மதிப்பெண்ணும் ( ஆங்கில வழி ) , எஸ் கவிதா 410 மதிப்பெண்ணும்( தமிழ்வழி) , குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற B.சுவேதா 395 மதிப்பெண்ணும் ( ஆங்கிலம் வழி ), பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற B.மதுமிதா 369 மதிப்பெண்ணும் (ஆங்கில வழி ) , சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.தேவதர்ஷினி 357 மதிப்பெண்ணும் ( ஆங்கில வழி) பெற்று முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளனர்.

மேலும் 400 மதிப்பெண்களுக்கு மேல் இரண்டு மாணவர்களும் , 300 மதிப்பெண்களுக்கு மேல் நான்கு மாணவர்களும், 300 க்கு கீழ் 8 மாணவர்களும், 200 கீழ் முப்பத்தி ஏழு மாணவர்களும், 100 மதிப்பெண்ணுக்கு 151 மாணவர்களும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

7 மாணவர்கள் விண்ணபித்தும் தேர்வு எழுதவில்லை என தெரியவருகிறது.

Updated On: 7 Nov 2021 7:56 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  2. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  3. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  4. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  5. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  6. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  7. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. கோவை மாநகர்
    தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலான சாரல் மழை ..